மேட்ரிமோனி மூலம் 21 பெண்களை ஏமாற்றிய நபர்

போலி ஐடி மற்றும் ஏஐ மூலம் போலீஸ் சீருடை அணிந்த புகைப்படங்களை உருவாக்கி, மேட்ரிமோனி தளங்களில் சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் எனக்கூறி 21 பெண்களை ஏமாற்றிய அகமதாபாத்தைச் சேர்ந்த ஹிமான்ஷு (30) என்ற ராக்கி பஞ்சால் கைது செய்யப்பட்டுள்ளார். பணி இடைநீக்கம், வங்கி முடக்கம் போன்ற போலி ஆவணங்களைக் காட்டி பல மாநிலப் பெண்களிடம் இவர் லட்சக்கணக்கில் பறித்துள்ளார். இவர் மீது ஏற்கனவே பாலியல் வழக்கும் உள்ளது என ஏசிபி பாரத் படேல் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி