நல்ல பாம்பை கூண்டில் வைத்து வளர்த்த நபர் கைது

ராமநாதபுரம்: நல்ல பாம்பினை கூண்டில் வைத்து வளர்த்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
திருப்புல்லாணி, பள்ளப்பச்சேரியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(48). இவர் பள்ளப்பச்சேரி அரசு உடல் பயிற்சிக் கூடத்தில் விஷத்தன்மை கொண்ட நாகப்பாம்பை கூண்டுக்குள் அடைத்து வளர்த்து வருவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற ராமநாதபுரம் வனத்துறையினர் பாம்பை பறிமுதல் செய்ததோடு, ராஜேந்திரனை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி