காதலியின் 2 மகள்களை வன்கொடுமை செய்த நபர் கைது

காதலியின் 2 மகள்களை வன்கொடுமை செய்த நபர் கைதாகியுள்ளார். குஜராத்தின் நவசாரி மாவட்டத்தில், திருமணமான பெண்ணுடன் 38 வயது இளைஞர் குடும்பம் நடத்தி வந்துள்ளார். 
அப்பெண்ணின் முதல் கணவருக்கு பிறந்த 2 மகள்களை பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களில் ஒருவரைக் கர்ப்பமாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிகள் 13 மற்றும் 14 வயதுடையவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளியை இன்று (மார்ச் 25) போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி