சென்னை கானத்தூரில் கடந்த திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்த மாமல்லன் நீர்த்தேக்க திட்ட பணிகளை தவெக அரசு திடீரென நிறுத்தியுள்ளது. சென்னையின் அடுத்த 6 ஆண்டுகளுக்கான குடிநீர் தேவையை மையமாக கொண்டு 5,161 ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பணிகள் இதுவரை 15% நிறைவடைந்துள்ளன. தற்போது இத்திட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், தலைநகரின் எதிர்கால குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.