நின்றிருந்த காரில் ஆண் சடலம் கண்டெடுப்பு.. பொதுமக்கள் அதிர்ச்சி

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடா அருகே நிறுத்தப்பட்டிருந்த பழைய காரில் ஒரு ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ந்து, இறந்தவர் யார்?, கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி