மலையாள நடிகர் சந்தோஷ் கேசவன் நாயர்(65) சாலை விபத்தில் மரணம்

பத்தனம்திட்டா அருகே நிகழ்ந்த கார் விபத்தில் பிரபல மலையாள நடிகர் சந்தோஷ் கேசவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் சென்ற அவரது மனைவி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 1982-ல் அறிமுகமாகி, வில்லன், நகைச்சுவை என 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாருக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி