சத்யசிவா இயக்கத்தில் உறியடி விஜயகுமார் மற்றும் கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள 'அறிவு' திரைப்படத்தின் ஆசிரியர் நாள் சிறப்பு போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பெண்களின் உரிமைகள், சமூக சவால்கள் மற்றும் கல்வி அறிவின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இந்த புதிய போஸ்டரின் மூலம், மலை கிராம மக்களுக்குக் கல்வியைக் கொண்டு சேர்க்கும் நாயகனின் போராட்டமே கதையின் மையக்கருவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.