பெண்களுக்கு மாதம் ரூ.1,000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.2,000-ஆக உயர்த்தி வழங்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். பல்வேறு நிபந்தனைகளால் லட்சக்கணக்கான பெண்கள் இத்திட்டத்தில் இணைய முடியாமல் உள்ளனர். வரும் தேர்தலில் திமுகவின் முக்கிய வாக்குறுதியாக தற்போதைய தகுதிகளைத் தளர்த்தி, சுமார் 50 லட்சம் முதல் 1 கோடி புதிய பயனாளிகளை இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.