மலையாள சினிமாவில் பிரபல இயக்குநரான ஷஃபி (56) தமிழில் விக்ரம், அசின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘மஜா’ படத்தை இயக்கியவர். மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதன் காரணமாக ஷஃபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ஷஃபி இன்று (ஜன. 26) காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.