அல்சர் வருவதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. அதன்படி அதிகமாக வலி நிவாரணி மாத்திரைகள் (painkiller) பயன்படுத்துவது, அதிக மனஅழுத்தம், தூக்கமின்மை, மது மற்றும் புகை பழக்கம், காரம் மற்றும் அமிலம் அதிகமான உணவுகள், நேரமில்லா உணவு பழக்கம், அதிக காபி/டீ அருந்துதல், அதிக வயிற்று அமில சுரப்பு போன்றவை அல்சருக்கு காரணமாகின்றன. சரியான உணவு பழக்கம் மற்றும் மனஅழுத்தக் கட்டுப்பாடு அவசியம்.