மகாசிவராத்திரி விழாவையொட்டி, புனித தலமான ராமேஸ்வரத்தில் இன்று (பிப்.15) அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள், கடற்கரை மணலில் சிவலிங்கங்களை செய்து வைத்து, மலர்கள் தூவி பக்தி பெருக்குடன் சிறப்பு வழிபாடுகளை மேற்கொண்டனர். பின்னர், நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை தரிசித்து சிவபுராண பாடல்களை பாடி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நன்றி:NewsTamil24/7