மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெவ்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். வியாழக்கிழமை (ஜனவரி 15) நடைபெற்ற தேர்தலில், தாணே மாநகராட்சியில் எம்என்எஸ் சார்பில் பிரஹ்லாத் மாத்ரே, சிவசேனை சார்பில் ரேகா மாத்ரே, பாஜக சார்பில் ரவீன் மாத்ரே ஆகியோர் வெற்றி பெற்றனர். இதேபோல், ஜால்கான் மாநகராட்சியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சிவசேனை சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.