மகா சிவராத்திரி விழா இன்று (பிப்.15) மாலை 5:04 மணிக்கு தொடங்கி, வரும் பிப்.16- ம் தேதி மாலை 5:34 மணிக்கு நிறைவடைகிறது. இந்த புண்ணிய காலத்தில் நாளை காலை மற்றும் மாலை வேளைகளில் புனித நீராடி, இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை கண்விழித்து சிவனை வழிபடுவது பெரும் பலனை தரும். முழு இரவும் விழித்திருக்க இயலாத பக்தர்கள், குறைந்தபட்சம் இரவு 11:30 மணி முதல் 1 மணி வரையாவது வழிபாட்டில் ஈடுபடலாம்.