வைகை அணையில் நீர்மட்டம் சரிவு.. மதுரையில் குடிநீர் தட்டுப்பாடு?

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 26.35 அடியாகக் குறைந்து குளம் போல் காட்சியளிக்கிறது. கடந்த ஆண்டு பருவமழை குறைந்ததாலும், பாசனத்திற்காக தொடர்ந்து நீர் திறக்கப்பட்டதாலும் நீர்மட்டம் கடுமையாக சரிந்துள்ளது. அடுத்த 17 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்க முடியும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி