உசிலம்பட்டி: லஞ்சம் பெற்ற சார் பதிவாளர், உதவியாளர் கைது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் ஷீயாவுதீன். இவரிடம் செட்டியபட்டியைச் சேர்ந்த மலைராஜன் என்பவரது தாத்தா பெயரில் உள்ள 4 சென்ட் இடத்தை பாக பிரிவினை செய்து சகோதரர்களான 4 பேருக்கு பத்திர பதிவு செய்ய நாடியுள்ளார்.

இந்த பாக பிரிவினை பத்திர பதிவிற்கு சுமார் 40 ஆயிரம் லஞ்சமாக சார் பதிவாளர் கேட்டதாகவும், அவ்வளவு தொகை கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக மலைராஜன் கூறிய நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவில் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று 27. 01. 2025 அன்றே பத்திர பதிவு செய்ய கைரேகை, கண் விழி, கையொப்பம் பெற்றுக் கொண்ட சூழலில் பணம் கொண்டு வரவில்லை என தெரிந்ததும் கணினியில் இணையத்தில் பழுதாகிவிட்டதாக கூறி இன்று பணத்துடன் வந்து பத்திர பதிவு செய்து கொள்ள கூறியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் அளித்த மலைராஜன், மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி சத்தியசீலன் தலைமையிலான போலீசாரின் அறிவுரை படி இரசாயணம் தடவிய ரூ. 20 ஆயிரம் ரூபாயை நேற்று (ஜன. 28) உசிலம்பட்டி சார் பதிவாளர் ஷீயாவுதீன் அவரது உதவியாளர் எடிசன் மூலம் லஞ்சமாக பெற்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக இருவரையும் கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி