உசிலம்பட்டி: கண்மாயை நவீனப்படுத்த ஆய்வு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் மையப்பகுதியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் உசிலம்பட்டி கண்மாயில் அவ்வப்போது குப்பைகள், கோழி கழிவுகளை கொட்டுவதாலும், நகராட்சியின் 7 வார்டு கழிவுநீர் கலக்கப்படுவதாலும் மாசடைந்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சூழலுக்கு தற்போது மாறி வருகிறது. 

ஒரு சில சமூக அமைப்புகள் அவ்வப்போது இந்த கண்மாயை தூர்வாரி சுத்தப்படுத்தினாலும், அரசு நிதி ஒதுக்கி கண்மாயை நவீனமயமாக்கி, நடைபாதை மற்றும் பூங்கா அமைத்து பாதுகாக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த கோரிக்கையின் அடிப்படையில் நேற்று (ஜூன் 3) மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவின் பேரில் சென்னை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி டேனியல் செல்லப்பா தலைமையிலான அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். எந்த எந்த பகுதியில் சாக்கடை கழிவுநீர் கலக்கப்படுகிறது, குப்பைகள் மற்றும் கோழி கழிவுகள் கொட்டப்படுவது குறித்து ஆய்வு செய்தனர்.

தொடர்புடைய செய்தி