தந்தை இறந்த செய்தியை அறிந்த ராமையா நேரில் வந்து தந்தையின் உடலை பார்த்து அழுதபோது மயங்கி விழுந்தாகவும், மயங்கியவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து இருவரது உடலையும் தும்மக்குண்டு பெருமாள்பட்டியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
நேற்று சர்வதேச தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்ட சூழலில் தந்தை இறந்த சோகத்தில் மகனும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் உசிலம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.