இந்நிலையில் நேற்று (மார்ச் 20) இரவு தோட்டத்திற்கு வந்த இரு நாய்கள் தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 5 ஆடுகளை கடித்து கொன்றது, மேலும் 2 ஆடுகள் படுகாயமடைந்த சூழலில் அவைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி தாலுகா காவல் நிலைய போலீசார் ஆடுகளை கடித்து கொன்ற நாய்கள் குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தோட்டத்தில் இருந்த சிசிடிவி-யை ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தோட்டத்திற்கு வந்த நாய்கள் ஆடுகளை கடித்து கொன்று திண்ணும் காட்சிகள் பதிவாகி இருந்தன, இந்த காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவ மாணவி திடீர் தற்கொலை