உசிலம்பட்டி: புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே லிங்கநாயக்கன்பட்டி கிராமத்தில் புதிய ரேஷன் கடை தமிழக அரசின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையை நேற்று (நவ. 13) உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் ரிப்பன் வெட்டி திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். தற்காலிகமாக கிராமத்தின் கலை அரங்கில் செயல்படும் இந்த கடைக்கு விரைவில் புதிய கட்டிடம் தனது சொந்த செலவில் கட்டித் தருவதாக எம்எல்ஏ அய்யப்பன் பொதுமக்களிடம் உறுதியளித்தார்.

தொடர்புடைய செய்தி