உசிலம்பட்டி: சிறு விளையாட்டரங்க பூமி பூஜையில் அமைச்சர்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சீமானூர்த்து - கல்லூர்த்து கிராமத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் புதிதாக கட்டப்படவுள்ள "முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்" பணிகளை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்செல்வன் அவர்களுடன் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் இணைந்து இன்று (ஜூன் 10) தொடங்கி வைத்து உரையாற்றினார்கள். உடன் மாவட்ட ஆட்சியர் சங்கீதா, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடப்பட்டி மணிமாறன், திமுக முக்கிய நிர்வாகிகள், உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி