இவரும் இவரது தெருவில் வசிக்கும் முருகன் என்பவரது மகளான கல்லூரி மாணவி பாண்டீஸ்வரி என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் தெரிந்து இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், பாண்டீஸ்வரிக்கு அவரது தாய்மாமனுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று (ஜன. 3) காதலன் ஜெயசூர்யா கடைக்கு வந்த பாண்டீஸ்வரி காதலனுடன் இணைந்து இருவரும் விஷம் அருந்தி கடையில் மயங்கி கிடந்துள்ளனர்.
மயங்கி கிடந்த இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றபோது இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த எம். கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.