உசிலம்பட்டி: லாரி ஓட்டுனர் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கீழப்புதூர் மலையாண்டி தியேட்டர் எதிர் தெருவில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வரும் பாஸ்கரன், லாரி ஓட்டுனர். வெளியூர்களுக்கு சென்று விட்டு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே அவர் தங்கியுள்ள வீட்டிற்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் அவர் நேற்று (ஜன. 1) தங்கியுள்ள வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதை கண்ட அக்கம் பக்கத்தினர், ஜன்னல் வழியாக வீட்டிற்குள் பார்த்த போது, பாஸ்கரன் அழுகிய நிலையில் பிணமாக தூக்கில் தொங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உறவினர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி