முன்னதாக கடந்த 6ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் துவங்கி, நான்கு கால யாக பூஜைகள் முடிந்த பின் இன்று கடம் புறப்பாடாகி 51 அடி உயரத்தில் உள்ள கற்கோவிலின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். உசிலம்பட்டி மற்றும் அத்திபட்டி, வில்லாணி, பெருமாள்பட்டி, இடையபட்டி, அம்பாசமுத்திரம் புதூர், தேனி மாவட்டத்தில் உள்ள தெப்பம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
நாய் கடித்த ஆத்திரத்தில் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு