உசிலம்பட்டி: மக்காச் சோளம் பயிரிட்ட விவசாயிகள் வேதனை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடப்பட்டி ஒன்றியத்தில் டி. இராமநாதபுரம், மேலத்திருமாணிக்கம், சங்கரலிங்காபுரம், பாப்பநாயக்கன்பட்டி, காமாட்சிபுரம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் பயிரிடும் மக்காச்சோளம் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்காச்சோள பயிர்கள் அடைப்புழுத்தாக்குதலால் பாதிப்படைந்துள்ளன. 

இந்நிலையில் மக்காச்சோளம் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ள சூழ்நிலையில் படைகுழுக்கள் தாக்கி சேதம் அடைந்துள்ளது. மேலும் மக்காச்சோளம் விளைச்சல் இன்றி அதிக பாதிப்படைந்துள்ளது. இதனால் ஏக்கருக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவு செய்து மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி