உசிலம்பட்டி: மருமகள் மரணம்; மாமியார் தூக்கிட்டு தற்கொலை

மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே பொன்னமங்கலம் ஏழுசாமி கோவில் தெருவில் வசிக்கும் ஜெயராமச்சந்திரன் தாயார் முத்து லெட்சுமி (55) என்பவர் தனது கணவர் இறந்ததிலிருந்து மகன் ஜெயராமசந்திரன் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் ஜெயராமசந்திரன் மனைவி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். 

இது குறித்த மனவேதனையிலிருந்து முத்து லெட்சுமி நேற்று (பிப்.20) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் ஜெயராமசந்திரன், செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி