இவர் உசிலம்பட்டி அருகே மாதரை எனும் இடத்தில் முன்புறம் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே வந்த கார் மோதியதில் நிலைதடுமாறி லாரியில் மோதி இவரது இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயமடைந்த விஸ்வநாத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.