உசிலம்பட்டி: மின் கம்பத்தில் டூவீலர் மோதியதில் வாலிபர் பலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் கிருஷ்ணாபுரம் கிழக்கு தெருவைச் சேர்ந்த சொக்கரின் மகன் காளிராஜ் (39) என்பவர் நேற்று முன்தினம் (டிச. 26) இரவு 9 மணி அளவில் டி. கிருஷ்ணாபுரத்திலிருந்து மொக்கத்தான் பாறை சாலையில் பூர்ண சந்திரன் தோட்டம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி இருசக்கர வாகனம் அருகே இருந்த மின்கம்பத்தின் மீது மோதியதில் கீழே விழுந்த காளிராஜிக்கு பின்புறம் தலை மற்றும் உடலில் பல்வேறு பகுதிகளில் காயம் ஏற்பட்டதால் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று (டிச. 27) உயிரிழந்தார். இதுகுறித்து எம். கல்லுப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி