உசிலம்பட்டி: வழிப்பாடிற்கு எடுத்து செல்லப்பட்ட சின்னப் பெட்டி

மதுரை உசிலம்பட்டி பாப்பாபட்டி பகுதி மக்களின் குலதெய்வக் கோயிலான ஒச்சாண்டம்மன் கோயிலில் அம்மனின் வழிபாட்டுக்குரிய பூஜை பொருட்கள் அடங்கிய 5 பெட்டிகள், உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோயிலில் உள்ளது. ஆண்டுதோறும் மகாசிவராத்திரி தினத்தில் 5 பெட்டிகளையும் எடுத்துச் சென்று வழிபாடு நடத்துவார்கள். 

இந்நிலையில் ஆடிமாதத்தில் நடுஆடி மற்றும் கார்த்திகை மாதம் முதல் தேதிக்கு சின்னப்பெட்டியில் உள்ள பூஜை பொருட்களை மட்டும் எடுத்துச் சென்று வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்அடிப்படையில் நேற்று (ஜூலை 31) நடுஆடி வழிபாட்டுக்காக சின்னப்பெட்டி எடுத்துச்செல்லும் நிகழ்ச்சி வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி