உலக கோப்பை 14-வது ஜூனியர் ஹாக்கி போட்டிகள் வரும் நவம்பர் 28-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 10-ஆம் தேதி வரையில் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. 20 கோடி ரூபாய் செலவில் மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு மைதானத்தில் சர்வதேச ஹாக்கி மைதானமாக மேம்படுத்தப்பட்ட இந்த மைதானத்தை தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதில் 1756 பார்வையாளர்கள் அமர்ந்து போட்டியை ரசிப்பதற்கான கேளரிகள் மைதானத்தில் இருபுறத்திலும் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் மதுரையில் 24 நாடுகளைச் சேர்ந்த ஜூனியர் ஹாக்கி அணிகள் விளையாடும் 72 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் மதுரை சர்வதேச ஹாக்கி மைதானத்தில் 34 போட்டிகள் நடைபெறும்.