மது போதையில் கீழே விழுந்தவர் பலி.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே மது போதையில் கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே டி இராமநாதபுரம் பேரையூர் கீழத்திரு மாணிக்கம் நடுத்தெருவில் வசிக்கும் கருப்பத்தேவர் மகன் திருமால் (57) என்பவர் மதுவுக்கு அடிமையானவர்.
இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மதுபோதையில் வீட்டிலிருந்து வெளியே வந்த போது தவறி கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை டி இராமநாதபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அவருடைய மனைவி ஆவடையம்மாள் டி இராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி