உசிலம்பட்டியில் பூத்து குலுங்கும் கொண்டை பூக்கள்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அயன்மேட்டுப்பட்டி, வகுராணி, சந்தைப்பட்டி, கள்ளப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் நடவு செய்துள்ள கோழி கொண்டை மற்றும் செண்டு பூக்கள் அறுவடைக்கு தயாராகி பூத்துக் குலுங்குகின்றன. தற்போது உசிலம்பட்டி மலர் சந்தையில் இவற்றின் விலை கிலோ ரூ10 முதல் ரூ20 வரை விற்பனையாகிறது. வரவிருக்கும் மகா சிவராத்திரி மற்றும் மாசி பச்சை திருவிழாவை முன்னிட்டு பூக்களின் விலை மேலும் உயரும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி