இரயில்வே பாதையை அடைப்பதை எதிர்த்து மக்கள் போராட்டம்.

மதுரை உசிலம்பட்டி சங்கம்பட்டியில் உள்ள மதுரை-போடி அகல ரயில் பாதையை ஒட்டியுள்ள சாலைகளை ரயில்வே துறையினர் தடுப்புகள் அமைத்து அடைக்க முயன்றதால், சங்கம்பட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டாமங்கலம் நுழைவிலிருந்து கொடிக்குளம், சோழவந்தான் வரை 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த சாலையை பயன்படுத்தி வந்தன. கோவிலாங்குளம், காந்திநகர், சக்கிலியங்குளம் ரயில்வே பாலங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் பொதுமக்கள் இந்த சாலையை நம்பியிருந்தனர். கிராம மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தொடர்புடைய செய்தி