மதுரை மாவட்டம் உத்தப்பநாயக்கனுார் காவல் நிலைய போலீசார் வத்தலக்குண்டு ரோட்டில் வாகன சோதனையின் போது, காரில் இருந்து 17 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் விருவீட்டைச் சேர்ந்த ஆயிஷாபானு, தேனி டி. கல்லுப்பட்டியைச் சேர்ந்த செல்வகணபதி, மதுரை குப்பணம்பட்டியைச் சேர்ந்த காசிபாண்டி ஆகிய மூவர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.