இந்நிலையில் இன்று (ஜூன் 15) அதிகாலை உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகில் சாலையைக் கடக்க முயன்ற 2 வயது மதிக்கத்தக்க புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது. ர
சாலையோரம் புள்ளிமான் இறந்து கிடந்ததைக் கண்ட அவ்வழியாகச் சென்றவர்கள் உசிலம்பட்டி நகரக் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகரக் காவல் நிலைய போலீசார் மற்றும் உசிலம்பட்டி வனச்சரக வன அலுவலர்கள் உயிரிழந்த புள்ளிமானை மீட்டு உடற்கூராய்விற்காக உசிலம்பட்டி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.