தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பூல்பாண்டியன் யாசகம் பெற்று, அந்தப் பணத்தை பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்கி வந்துள்ளார். 2020 கொரோனா காலத்தில் மதுரையில் தங்கியிருந்தபோது, யாசகம் பெற்ற பணத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கத் தொடங்கினார். இதுவரை சுமார் 1 கோடி ரூபாய் வழங்கியுள்ளார். தற்போது புற்றுநோய் பாதிப்பால் பெங்களூருவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பெங்களூருவில் உள்ள தமிழர்கள் வழங்கிய 10,000 ரூபாயை மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமாரிடம் வழங்கினார்.