மதுரை: பயமுறுத்தும் திமுக - ஆர்.பி.உதயகுமார்

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், திமுகவை விமர்சித்துள்ளார். திமுக பயப்படும் கட்சி அல்ல, மற்றவர்களைப் பயமுறுத்தும் கட்சி என்று அவர் கூறினார். இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை திமுக பயமுறுத்தியதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது எடப்பாடியாரையும் பயமுறுத்த முயல்வதாகக் குற்றம் சாட்டினார். திமுகவின் அறிவு, உழைப்பு ஆகியவை வாரிசு அரசியலுக்கும் மன்னராட்சிக்கும் மட்டுமே பயன்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.

தொடர்புடைய செய்தி