தனிநபரும் கடந்த சில நாட்களுக்கு முன் கழிவுநீர் செல்லும் வழியை அடைத்ததால் கழிவுநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதியிலேயே தேங்குவதால் நோய்த்தொற்று ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதாக நகராட்சி அலுவலர்களிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை என்பதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று (மார்ச் 12) உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்திற்கு வந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து நகரமன்ற தலைவர் சகுந்தலா மற்றும் உறுப்பினர்கள், நகராட்சி ஆணையாளர் சக்திவேல் தலைமையிலானோர் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.