திரைப்பட நடிகரும் பிக் பாஸ் புகழ் வையாபுரி, இன்று திங்கட்கிழமை காலை மதுரை ஸ்ரீ மகா பெரியவா கோவிலில் பார்வையற்றவர்களுக்கு இலவச அரிசி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "எனது நண்பர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள். இந்த ஆட்சி அமைந்து 2 வாரமாக சிறப்பாக அவர் நினைத்தபடி நடந்து கொண்டுள்ளது" என்றார். தமிழக அமைச்சரவையில் பிராமணர்களுக்கு 2 அமைச்சர் பதவி கொடுத்ததை பற்றி தேவையற்றதை பேசுவதாகவும், தமிழக மக்கள் விஜய் முகத்திற்காக வாக்களித்தார்கள் என்றும் கூறினார்.