மதுரை உசிலம்பட்டியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமைக்க உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டியில் அரசுக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெற்றன. ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் அமையவுள்ள இடத்தை நேற்று (ஜூலை 4) உசிலம்பட்டி சார்பு நீதிமன்ற நீதிபதி ஜஸ்டின் ராஜ், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2 நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். உடன் அரசு வழக்கறிஞர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் இருந்தனர்.