ஜெ. பிறந்த நாள் கொண்டாட்டம். எம்எல்ஏ பேச்சு.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு, உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையில் அதிமுக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிகழ்வில் பேசிய எம்எல்ஏ அய்யப்பன், ஜெயலலிதாவின் நினைவு தினமா அல்லது பிறந்த தினமா என குழம்பிப் பேசினார். மேலும், அம்மாவின் ஆன்மாவும், எம்ஜிஆரின் ஆன்மாவும் தங்களையும், ஓபிஎஸ்யையும் ஆசிர்வதிக்க வேண்டும் என்றும் பேசினார்.

தொடர்புடைய செய்தி