மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி 6 ஆம் வகுப்பு மாணவர்கள் 6 பேர் சம்பவதினத்தன்று பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது சாலையில் ஒரு வெள்ளிக் கொலுசு கிடந்துள்ளது. அதை எடுத்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் மாணவர்கள் ஒப்படைத்தனர்.
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளர் காமாட்சி, தனிப்பிரிவு காவலர் அய்யர், உள்ளிட்ட போலீசார் மாணவர்கள் ஹரி விஷ்ணு, தர்ஷன், ரித்திக், சுதீஷ், ஹர்ஷன், ஹர்ஷன் ஆகியோரின் நேர்மையை பாராட்டினார்கள்.