மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உடையாம்பட்டியைச் சேர்ந்த காசுகொடி என்பவர் விவசாய வருமானம் போதாததால் கோழிப்பண்ணை அமைத்திருந்தார். நேற்று முன்தினம் (ஜூன் 1) பலத்த காற்றுடன் பெய்த மழையால், பண்ணையைச் சுற்றியிருந்த 50க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து பண்ணையில் விழுந்தன. இதனால் சுமார் 500க்கும் மேற்பட்ட கோழிக் குஞ்சுகள் உயிரிழந்தன. கோழிகளுக்கான ஷெட் முற்றிலும் சேதமடைந்தது. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க பண்ணை உரிமையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.