மதுரை: பட்டாசு வெடித்து திமுகவினர் கொண்டாட்டம்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (பிப். 13) காலை, மகளிர் உரிமைத் தொகை பெறும் மகளிர்களின் வங்கிக் கணக்கிற்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான 3000 ரூபாய் முன் தொகையாகவும், கோடைகால தொகையாக 2000 ரூபாய் என மொத்தம் சுமார் 5000 ரூபாய் வரவு வைக்கப்படும் என அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு, உசிலம்பட்டி திமுக நகர செயலாளர் தங்கபாண்டியன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தொடர்புடைய செய்தி