மதுரை: நகராட்சி ஊழியர்களை சிறை பிடித்த பொதுமக்கள்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில், நகராட்சி சேகரிக்கும் குப்பைகளில் 5% மட்டுமே உரமாக்கப்பட்டு, 95% குப்பைகள் எரியூட்டப்படுவதால் நோய் தொற்று ஏற்படுவதாகக் கூறி பொதுமக்கள் நகராட்சி வாகனத்தையும் ஊழியர்களையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஊழியர்களை விடுவித்த நிலையில், சார் ஆட்சியர் உட்கர்ஷ்குமார் அப்பகுதியை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி