பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பொங்கல் வைத்த பாஜகவினர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருமாள்கோவில்பட்டியில் இன்று (ஜன. 11) பாஜக பிரச்சார பிரிவு சார்பில் தை திருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை, நெய், ஏலக்காய், முந்திரி, கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. பாஜக மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் இந்த பரிசு தொகுப்புகளை வழங்கினர். மேலும், 100 நாள் வேலை திட்டத்தை 125 நாள் திட்டமாக அறிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி