மதுரை மாவட்டம் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனை அருகே நடைபெற்ற அதிமுக தெருமுனை பிரச்சார கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் உதயகுமார், உசிலம்பட்டி மண் இரட்டை இலையின் கோட்டை என்றும், வரும் 2026 தேர்தலிலும் இரட்டை இலை தான் உசிலம்பட்டியில் மலரும் என்றும் உறுதியாகக் கூறினார். மேலும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக அமர உசிலம்பட்டி தொகுதியின் வாக்கு முதல் வாக்காக அமையும் என்றும் அவர் பேசினார்.