மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டவுன் மற்றும் உத்தப்ப நாயக்கனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பிப். 2 அன்று விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த சடையாண்டி (20), சக்தி முனி (19), முகேஷ் கண்ணன் (26), ஆனந்த் (37), விவேக் (35), பிரேம் குமார் (37), பாஸ்கரன் (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து மொத்தம் 13 கிலோ 950 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.