போலீசார் அங்கு சென்று பார்த்த போது, மோட்டார் அறை அருகில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தலை, கையில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் அந்த பெண் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து சிலைமான் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசாரிடம் பேசிய போது கொலையானவர் வெளியூர் நபராக இருக்கலாம். இங்கு அழைத்து வந்து கொலை செய்திருக்கலாம். மேலும் கொலை நடந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.