திருமங்கலம்: லஞ்சம் வாங்கிய விஏஓ கைது

திருமங்கலம் குழிப்பட்டியைச் சேர்ந்த முத்துபிரியா (39) என்பவர் அதே ஊரில் கடந்த டிசம்பர் மாதம் 15 சென்ட்  நிலத்தை விலைக்கு வாங்கி திருமங்கலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்தார். 30 நாட்களுக்குள் முத்துபிரியா பெயரில் பட்டா மாறுதல் ஆகாததால் பிப்.,6ல் மதிப்பனூர் வி.ஏ.ஓ., காசிராஜனிடம் (39) இதுகுறித்து கேட்டபோது ரூ.6000 லஞ்சம் கேட்டார். நேற்று முன்தினம் ரூ 5,500 பணத்தை  முத்துபிரியாவிடமிருந்து பெற்ற போது லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விஏஓவை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி