மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகின்ற 30 ஆம் தேதி வைகாசி விசாக பால்குட திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆர்டிஓ சிவஜோதி தலைமையில் இன்று (மே 26) கோயில் வளாகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கோயில் நிர்வாக அதிகாரி குணசேகரன், உதவி காவல் ஆணையர் சசி பிரியா மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.